உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு இராஜதந்திர தூது: ஈரான் மறுப்பு!

அமெரிக்காவுடன் தமது நாடு எவ்வித இராஜதந்திர பேச்சுகளையும் தற்போது முன்னெடுக்கவில்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார்.

அமெரிக்கத் தூதுவர்  Steve Witkoff மூலம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என வெளிவந்த தகவல்களை அவர் அடியோடு நிராகரித்துள்ளார்.

இத்தகைய தகவல்கள் வெறும் வதந்திகள் என்றும், எண்ணெய் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கில் பரப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

y Steve Witkoff உடனான தனது கடைசி உரையாடல் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு முன்னரே நிகழ்ந்ததாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைகளை ஆதாரமற்றவை என்று சாடிய அராக்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது எந்தவொரு தூதரகப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!