இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் : G07 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பில் G07 நாடுகளின் தலைவர்களின் கலந்துரையாடலுக்கு இன்று (14) அழைப்பு விடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வெட்கமற்ற தாக்குதல் தொடர்பான பதில்களை கலந்துரையாடுவதே இதன் நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகவும், அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நேற்று (13) இஸ்ரேல் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன், பல ஆளில்லா விமானங்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.