ரியாத் செல்லவுள்ள சவுதி அரேபியாவுக்கான ஈரான் தூதர்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்ட தெஹ்ரானின் இராஜதந்திர பணிக்கு தலைமை தாங்குவதற்காக சவுதி அரேபியாவுக்கான அதன் தூதர் விரைவில் ரியாத் செல்வார் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இராச்சியத்திற்கான ஈரானின் புதிய தூதர் அலிரேசா எனயாட்டி, வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோல்லாஹியனை சந்தித்து ரியாத் செல்வதற்கு முன் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏழு ஆண்டு கால இராஜதந்திர பிளவை உடைத்து, தெஹ்ரான் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் ரியாத்தில் அதன் தூதரகத்தை மீண்டும் திறந்தது,
2016 இல் சன்னி பெரும்பான்மையான இராச்சியம் ஒரு முக்கிய ஷியா மதத் தலைவரை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள சவுதி தூதரகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.
குவைத்துக்கான முன்னாள் தூதரும், பிராந்திய விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் துணைவருமான எனயாதி, தூதரகத்தை தயார்படுத்துவதற்காக சமீபத்தில் ரியாத்துக்குச் சென்றிருந்தார்.