இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஈரான் ஜனாதிபதி

ஜூன் 16 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் லேசான காயமடைந்ததாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஏவுகணை விழுந்ததில் பெசேஷ்கியன் காலில் காயம் அடைந்தார்.
ஜனாதிபதி பெசேஷ்கியானைத் தவிர, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், நீதித்துறைத் தலைவர் மொஹ்சேனி எஜேய் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
பெஷேஷ்கியனுடன் சேர்ந்து, வெளியேறும் போது வேறு சில அதிகாரிகளும் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)