ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார் ஈரான் இராஜதந்திரி!
ஆஸ்திரேலியாவிற்கான ஈரானின் முன்னாள் தூதுவர் Mohammad Pournajaf, ஈரான் அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.
நீண்ட காலமாகப் இராஜதந்திர சேவையில் பணியாற்றிய இவர், 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த நிலையில் தற்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்த்து, ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த ஈரானிய மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த சில வன்முறைச் சம்பவங்களில் ஈரானியத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் தற்போதைய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஆதிக்கத்திலிருந்து விலகி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது.





