ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பாதுகாக்க தயங்காது: வெளியுறவு அமைச்சகம்

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைப் பாதுகாத்து, அதைத் தொடர்ந்து செய்யத் தயங்காது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை எதிர்கொள்வதாக உறுதியளித்த ஒரு நாளுக்குப் பிறகு இவ்வாறு கூறியுள்ளார்.
“ஈரானின் அமைதியான அணுசக்தித் திட்டம் தொடர்கிறது, கடந்த மூன்று தசாப்தங்களாக, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் உறுப்பினராக ஈரானின் உரிமைகளின் அடிப்படையில் உள்ளது..
கண்டிப்பாக இந்த விஷயத்தில் நாங்கள் எந்த பலவீனத்தையும் காட்ட மாட்டோம்,” என்று அவர் கூறினார்.
ஈரானின் அணுசக்தி லட்சியங்களையும் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கையும் முறியடிப்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிற்குப் பின்னால், ஒவ்வொரு வன்முறைச் செயலுக்குப் பின்னால், ஒவ்வொரு ஸ்திரமின்மைக்கு பின்னால், இந்த பிராந்தியத்தை வீடு என்று அழைக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் அனைத்திற்கும் பின்னால், ஈரான் உள்ளது.” என ருபியோ கூறினார்