இஸ்ரேலுடன் எந்நேரமும் போர் தொடங்கலாம் – தயாராக இருக்க வேண்டும் என ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுடன் எந்நேரமும் மீண்டும் போர் தொடங்கலாம் என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது ரேஸா அரேவ் எச்சரித்துள்ளார்.
அதற்கமைய, அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தற்போது அதற்கான திட்டங்களை வகுப்பதாக, அதன் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் ஆலோசகர் தெரிவித்தார்.
ஈரானும் இஸ்ரேலும் தற்போது தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியுள்ளன எனவும் அதனை சண்டைநிறுத்தமாகக் கருத முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சண்டைநிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)