உலகம் செய்தி

எரிசக்தி கட்டமைப்பு சாம்பலாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சாம்பலாக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே ஈரான் இராணுவம் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை அமெரிக்கா அதிகரித்து வருகின்றது. கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படைகளை அனுப்பி வருகின்றது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு உலகளவில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!