செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஈரான்!
ஈரான் தனது செயற்கைக்கோளை இன்று (20.01) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
தெஹ்ரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மேம்படுத்துவதாக மேற்குலக நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் ஈரானும் – பாகிஸ்தானும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதனால் இவ்விரு நாடுகளுக்கும் மத்தியில் பதற்றங்கள் அதிகரித்துள்ள வேளையில் சிரியாவின் மேற்படி நடவடிக்கை பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோரயா செயற்கைக்கோளானது, பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 750 கிலோமீட்டர் (460 மைல்) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுதல் ஈரானின் சிவிலியன் விண்வெளி திட்டத்துடன் ஈரானின் புரட்சிகர காவலர்களின் விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அறிக்கை கூறுகிறது.