அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு ஈரான் கோரிக்கை
அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு Mexico மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் FIFA
ஈரான் பேச்சு நடத்திவருகின்றது.
உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி தனது லீக் ஆட்டங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய பதற்றமான போர்ச் சூழலால், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க அந்நாட்டின் விளையாட்டுதுறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் இந்த விவகாரத்தை சர்வதேச கால்பந்து அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.




