இஸ்ரேலை நோக்கி 300 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவிய ஈரான்!
ஈரான் ஏவிய 300 வகையான ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அவற்றில் 99 வீதமானவை இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி ஈரான் 170 ஆளில்லா விமானங்களையும், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகளையும், 120க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவியது என்று ரியர் அட்ம் டேனியல் ஹகாரி கூறினார்.
இதனால் இஸ்ரேலின் ஒரு விமான தளம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலின் ஆறு மாத காலப் போரில் இஸ்ரேலும் ஈரானும் மோதல் போக்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)