கடந்த 8 மாதங்களில் 800க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட ஈரான் – ஐ.நா
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஈரானில் 800க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
“2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மரண தண்டனை நிறைவேற்றங்களில் பெரும் அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஈரானிய அதிகாரிகள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 28, 2025 வரை குறைந்தது 841 பேரை தூக்கிலிட்டுள்ளனர்” என்று செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசானி ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மட்டும், ஈரான் குறைந்தது 110 நபர்களை தூக்கிலிட்டுள்ளது. இது ஜூலை 2024 இல் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.





