இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவிய ஈரான்!

இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது.
இந்த உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் நாட்டின் உயர்ந்த பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும். ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் தலைமையில் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கவுன்சில் பாதுகாப்பு திட்டம், ஈரான் அயுதப்படைகளின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை கையாளும். பாராளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி, ராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் இதன் தொடர்பான அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட இருக்கிறார்கள்.
கடந்து ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவத் தளபதி மற்றும் கமாண்டர்ஸ் ஆகியோரும் அடங்குவர்.
1980ஆம் ஆண்டு ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையில் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இது போன்று பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது.