உலகம் செய்தி

தீர்க்கமான கட்டத்தை எட்டிவிட்டது போர்: ஈரானின் ஆட்சி மாற்றத்தை வலிறுத்துகிறது இஸ்ரேல்! 

ஈரானுடனான போர் தற்போது மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்  Israel Katz தெரிவித்தார்.

அத்துடன், ஈரானின் எண்ணெய் முனையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அவர் வரவேற்றுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அதிகளவில் வைப்பதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகின்றது.

எனினும், கடல் பகுதியில் வெடிபொருட்களை வைப்பதாக முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளை ஈரான் தரப்பு க மறுத்துள்ளது.

தற்போது ஈரானிய தலைநகர் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு ஆட்சி மாற்றத்தின் மூலமே இந்த வன்முறைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!