காசாவிற்கான உதவிப் படகுகளை இஸ்ரேல் இடைமறித்ததற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி வியாழக்கிழமை(02), சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறித்து அவற்றின் பயணிகளை தடுத்து வைத்ததை கடுமையாகக் கண்டித்தார்.
புதன்கிழமை மத்தியதரைக் கடலில் குளோபல் சுமுத் புளோட்டிலா (GSF) இன் பல கப்பல்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாகவும், பயணிகளை இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றுவதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் ஒரு அறிக்கையில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளின் ஆர்வலர்கள் மற்றும் பொதுக் குழுக்களின் மனிதாபிமான நடவடிக்கையையும், காசா பகுதியை முற்றுகையிடுவதை முறியடிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டிய அதே வேளையில், GSF புளோட்டிலா மீது இஸ்ரேல் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதையும், தடுத்து வைத்ததையும் பகாயி கண்டனம் செய்தார்.
இஸ்ரேல் தொடரணி மீது நடத்திய தாக்குத்தால் சர்வதேச விதிகளை தெளிவாக மீறுவதாகவும், ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் அவர் விவரித்தார்.
40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட சுமார் 50 கப்பல்களைக் கொண்ட இந்த புளோட்டிலா, இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை சவால் செய்வதையும், பாலஸ்தீனியர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





