லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேலின் “விரிவான இராணுவ ஆக்கிரமிப்பை” ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி கண்டித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உண்மையான அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.
லெபனானில் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த ராக்கெட் தாக்குதலுக்கு ஹெஸ்பொல்லா பொறுப்பேற்க மறுத்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)