ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பதற்றத்தை ஏற்படுத்திய ஈரான்!
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இரண்டு எண்ணெய் கப்பல்களை கைப்பற்ற ஈரான் முயற்சித்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்காக இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படைக் கப்பல்கள் அமெரிக்க கடற்படை பேரிடர் சமிக்ஞைகளுக்கு பதிலளித்த பின்னர் பின்வாங்கியதாகவும், இரண்டு வணிகக் கப்பல்களும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது ஐந்து வணிகக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அமெரிக்கா மேலும் கூறியுள்ளது.
இதேவேளை உலக வல்லரசுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக விலகியது. இதனையடுத்து பொருளாதார முடக்கங்கள் அறிவிக்கப்பட்டன.
இதனை மீட்டெடுப்பதற்காக ஈரான் போராடி வருகிறது.