செய்தி விளையாட்டு

IPL Update – ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

IPL கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உறுதி செய்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

போட்டிக்கு முன்னதாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இருந்தபோதிலும் லீல் சேரில் அமர்ந்தவாறு பணியாற்றினார்.

இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வீரர், பயிற்சியாளர் என்ற வகையில் நீண்ட கால உறவு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அணி உடனான உறவு முடிவுக்கு வருகிறது.

அணியில் தலைமை பயிற்சியாளரை தாண்டி மிகப்பெரிய பொறுப்பு வழங்க உரிமையாளர்கள் ஆஃபர் தெரிவித்த நிலையில், தற்போது மறுக்கப்பட்டதால் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று 9ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி