செய்தி விளையாட்டு

IPL Update – கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

மார்ச் 22ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களின் கேப்டன்களை அறிவித்து விட்டனர்.

அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்தது. கேப்டனாக ரகானேவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!