IPL Update – பெங்களூரு அணியில் முக்கிய மாற்றம்

10 அணிகள் பங்கேற்ற 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.இதனால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.
மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
எனவே பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணி அடுத்த போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
காயம் காரணமாக பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.