IPL Update – தொடரின் முதல் பாதியை தவறவிடும் இந்திய வீரர்கள்

10 அணிகள் இடையிலான 18வது IPL தொடர் வருகிற 22ந் தேதி முதல் மே 25ந் தேதி வரை நடக்கிறது.
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.
அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் முதல் பாதி ஆட்டத்தை தவற விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை தொடர்ந்து கே.எல். ராகுலும் சில போட்டிகளை தவற விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், ராகுல் மனைவிக்கு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க அவர் விரும்புவதால் தொடக்க கட்டத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.