செய்தி

IPL Update – மெகா ஏலம் குறித்த முழு விவரம்

இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன.

2024 IPL போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 IPL தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

IPL 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் IPL நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி IPLலில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி