செய்தி விளையாட்டு

IPL Update – அடுத்த வருட தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

18வது IPL கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் IPL நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன.

ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி IPLலில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அணிகளில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 2025 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டு வருகிறார்.

அடுத்தடுத்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக 2025 IPL சீசன் மெகா ஏலத்தில் இருந்து அவர் விலக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரை முடித்த கையோடு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 42 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி