செய்தி விளையாட்டு

IPL Update – IPL தொடரிலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் BCCI

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

இதைத் தொடர்ந்து, பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் தோல்வியை தழுவியது.அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.

இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது BCCI பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பயிற்சிக்கு செல்லும்போது அணியினர் செல்லும் பேருந்துகளில் தான் வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும் பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என்று BCCI கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொது அங்கீகார அட்டையையே வீரர்கள் கொண்டு வர மறந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, போட்டி முடிந்த பின்பு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் இதனை முதல்முறை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படும் 2 ஆவது முறையாக மீறினால் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 26 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி