IPL Qualifier 2 – மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்
																																		ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
        



                        
                            
