IPL Qualifier – கொல்கத்தா அணிக்கு 160 ஓட்டங்கள் இலக்கு
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.
அதனை தொடர்ந்து அபிஷேக் சர்மா 3, நிதிஷ் ரெட்டி 9, சபாஷ் அகமது 0, என வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக விளையாடிய கிளாசன் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் திரிபாதியுடன் சமாத் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அரை சதம் கடந்தார்.
மிகவும் நம்பிக்கையுடன் இந்த ஜோடி விளையாடி வந்தது. தேவையில்லாமல் 1 ரன்னுக்கு ஆசைப்பட்ட இந்த ஜோடி ரன் அவுட் ஆனது. இதில் ராகுல் திரிபாதி 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இம்பெக்ட் பிளேயாராக வந்த சன்வீர் சிங் கோல்டன் டக் அவுட்டும் புவனேஸ்வர் குமார் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.
இதனையடுத்து கேப்டன் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். இறுதியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.