செய்தி விளையாட்டு

IPL Match 70 – மழையால் போட்டி ரத்து

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று நடைபெற இருந்த இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. எனினும் மழை காரணமாக இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இடையில் மழை நின்றதால், போட்டி ஏழு ஓவர்கள் நடத்தப்படும் என்று கூறி டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த நிலையில், டாஸ் போடப்பட்டதில் இருந்து மழை மீண்டும் துவங்கியது.

தொடர்ச்சியாக மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவாலிஃபையர் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!