IPL Match 59 – 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.
ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)