IPL Match 58 – மழையால் RCB மற்றும் KKR போட்டி ரத்து

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்திற்கு பிறகு இந்து மீண்டும் ஆரம்பமான IPL போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி தொடங்க இருந்தது.
ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
(Visited 2 times, 2 visits today)