IPL Match 58 – மழையால் தாமதமாக தொடங்கிய பஞ்சாப்- டெல்லி போட்டி

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில், தர்மசாலாவில் மழை பெய்ததால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தற்போது வரை விளையாடி வரும் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்றுள்ளது.
(Visited 14 times, 1 visits today)