செய்தி விளையாட்டு

IPL Match 58 – பாதுகாப்பு காரணங்களுக்காக பஞ்சாப் மற்றும் டெல்லி போட்டி ரத்து

ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக டாஸ் போட தாமதமானது.

டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்னில் அவுட்டானார்.

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!