IPL Match 57 – சென்னை அணிக்கு 180 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. ரகானே 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 6ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார்.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.