IPL Match 56 – குஜராத் அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்கு

நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகள் முதல் 4 இடத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 7 ரன்னிலும், ரிக்கல்டன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிந்தனர். இதையடுத்து வில் ஜேக்ஸ் – சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து ஆட்டம் முழுவதும் குஜராத் அணியின் கையே ஓங்கியது. குஜராத்தில் சிறப்பான பந்துவீச்சால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான திலக் (7), ஹர்திக் (1), நமன் திர் (7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர், பிரசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.