செய்தி விளையாட்டு

IPL Match 51 – மும்பை அணிக்கு 170 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர்.

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த மனிஸ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.

பொறுப்புடன் ஆடிய மனிஷ் பாண்டே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் 7 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதிவரை அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!