IPL Match 43 – தொடரின் 7வது தோல்வியை பதிவு செய்த சென்னை

ஐ.பி.எல். தொடரின் 43வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
(Visited 22 times, 1 visits today)