IPL Match 41 – மும்பை அணிக்கு 144 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இந்நிலையில், அபிஷேக் சர்மா 8 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.