IPL Match 40 – டெல்லி அணிக்கு 160 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து வந்த பூரன் 9 ரன்னிலும் சமத் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 45 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து டேவிட் மில்லர் மற்றும் பதோனி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
(Visited 3 times, 3 visits today)