IPL Match 32 – ராஜஸ்தான் அணிக்கு 189 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2025 தொடரின் 32ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் மெக்கர்க்- அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மெக்கர்க் வழக்கம்போல் சொற்ப ரன்னில் (9) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட்டானார்.
ஒரு பக்கம் இரண்டு விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் ஓவர் செல்ல செல்ல ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
ஸ்டப்ஸ் 34 ரன்களும், அஷுடோஷ் சர்மா 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழபபிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.