IPL Match 32 – சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். 2025 தொடரின் 32வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது டெல்லி. ராஜஸ்தான் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.