IPL Match 29 – டெல்லி அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
தொடர்ந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் பெற்றது. எனவே 206 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.
(Visited 26 times, 1 visits today)