IPL Match 22 – சென்னை அணிக்கு 220 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
(Visited 2 times, 1 visits today)