IPL Match 21 – கடைசி வரை போராடி தோல்வியடைந்த கொல்கத்தா அணி

ஐ.பி.எல். தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார்.
நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார்.
வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.