IPL Match 13 – 171 ஓட்டங்கள் குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஐபிஎல் 2025 தொடரின் 13ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.