IPL Match 12 – முதல் வெற்றியை பதித்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் – டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 117 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட் ஆனார்.
வில் ஜாக்ஸ் 16 ரன்களில் வெறியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக ஆடியது.
களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் விளாசி மும்பை வெற்றியை எளிதாக்கினார்.
இதனால், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.