IPL Match 08 – சென்னை அணிக்கு 197 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். விரட் கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது ஆர்சிபி 5 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்கருடன் 32 ரன்கள் சேர்த்தார்.
3வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார்.
மறுமுனையில் விராட் கோலி 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
ஏராளமான வாய்ப்புகள் பெற்ற ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
பதிரனா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நூர் அகமது 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினர்.