IPL Match 08 – சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி

ஐ.பி.எல். 2025 சீசனின் 8வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.