IPL Match 07 – லக்னோ அணிக்கு 191 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2025 சீசனின் 7வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3வது ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கிளாசனும் அதிரடியாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் ரெட்டி 32 பந்தில் வெளியேறினார். இவரை ரவி பிஷ்னோய் க்ளீன் போல்டாக்கினார்.
இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.