IPL Match 05 – 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். 2025 சீசனின் 5வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சுப்மன் 33 கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும், சாய் சுதர்சன் 74 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.