IPL Match 02 – 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது.
இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.
4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.