இந்தியா விளையாட்டு

மழை காரணமாக IPL இறுதி போட்டி ரத்து

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

இன்று மாலை 7.30 மணியளவில் டாஸ் போட இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது.

இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இன்னும் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளையும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!